அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் விவகாரம்… 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Author: Babu Lakshmanan
20 February 2023, 7:54 pm

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அருகே பல்லவாடா கிராமத்தில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி பகல் ஒரு மணி அளவில் அதிமுக ஒன்றிய பெண் கவுன்சிலர் ரோஜா (44) மற்றும் அவரது மகன் ஜேக்கப் (22) ஆகியோர் கடத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 28ஆம் தேதி பல்லவாடா கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் வயது (26), கும்ப்ளியை சார்ந்த சந்தோஷ் (26), ஆந்திர மாநிலம் சுதிர்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர (30), நாகலாபுரத்தை சேர்ந்த நாவீன் (28) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வழக்கில் தொடர்புடைய ராச பாளையத்தை சேர்ந்த சந்திர சேகர் (30) என்பவர் கடந்த 31 தேதியன்று பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையில் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் முக்கிய குற்றவாளிகளான தமிழகத்தைச் சேர்ந்த சுரேந்தர், சந்தோஷ் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பாஸ்கர், நவீன் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி