கொள்ளையடிப்பதில் கருணாநிதியை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்… PTR ஆடியோ விவகாரம்… மறுக்காதது ஏன்..? சிவி சண்முகம் கேள்வி

Author: Babu Lakshmanan
1 May 2023, 4:55 pm

கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்று அதிமுக எம்பி சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசியதாவது :- ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை குறைந்துள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் பச்சை பொய்யை கூறி வருகிறார். எங்கே பார்த்தாலும் கூட்டு பாலியல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 26,27 ஆம் தேதி விழுப்புரத்திற்கு கள ஆய்விற்காக வந்த போது வடமாநிலத்தை சார்ந்த சிறுமியை 4 சிறுவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். முதல்வர் வருகையின் போது நடைபெற்ற சம்பவத்தை காவல் துறையினர் மூடி மறைத்தனர். ஏன் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

வெளி மாநிலங்களிலிருந்து வந்து தொழில் புரிவோருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் திமுக ஆட்சியில் உள்ளது. ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கிற நிதி அமைச்சர் பிடி பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளிவந்தததில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் 30 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை சேர்த்து வைத்துள்ளார்கள்.
அதனை எதில் முதலீடு செய்ய வேண்டும் என புரியாமல் உள்ளது.

கொள்ளை அடித்த பணம் குறித்த ஆடியோ விவகாரம் குறித்து ஏன் முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆடியோ வெளியிட்டவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை. கடந்தாண்டு மூலதன செலவு என்பது 36 ஆயிரம் கோடி. இவர்கள் கொள்ளை அடித்து இருப்பது 30 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடியில் 30 ஆயிரம் கோடியை ஸ்டாலின் தலைமையிலான அரசு கொள்ளை அடித்துள்ளார்கள். மறைந்த முதல்வர் கருணாநிதியை கொள்ளையடிப்பதில் மிஞ்சி இருக்கிறார் ஸ்டாலின்.

திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் சட்டம் கொண்டு வந்து 100 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில் 12 மணி நேரமாக மாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. பாஜக அதிமுக கூட்டணியில் உள்ளபோது அவர்கள் கூறுவதை நாங்கள் ஏற்கிறோம். ஜி கொயர்ல நடைபெற்ற முறைகேடு குறித்து முறையாக விசாரனை செய்ய வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்து வருகிறது. திமுக அரசு கோமாளி அரசாக செயல்பட்டு வருகிறது. சட்டம் போட வேண்டியது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே பின்வாங்குவதை தான் ஸ்டாலின் அரசு கொண்டுள்ளதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!