“கள்ளச்சாரய சம்பந்தமான ஆதாரத்தோட நாளைக்கு ஆளுநர பாக்க போறோம்”!-பரபரப்பாக பேட்டியளித்துச் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

Author:
27 June 2024, 4:19 pm
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணபுரத்தில் கள்ளச்சாராயம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என போராட்டம் வலுவடைந்துள்ளது அதன் ஒரு பகுதியாக அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினருக்கு ஆதரவாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறிது நேரம் போராட்டத்தில் அமர்ந்து விட்டு கிளம்பும்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,

இன்றோடு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் கையில் வைத்திருக்கிறோம்.அதனை நாளை 12 மணி அளவில் ஆளுநரிடம் சென்று சமர்ப்பிக்க உள்ளோம். இந்த வழக்கை உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரிய வேண்டும் ஆளும் கட்சியினர் உண்மையை வெளியே வரவிடாமல் தடுக்கின்றனர். கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் என்றால் நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கோ, விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ எவ்வளவு கொடுப்பார்கள்? இன்று உலக சர்க்கரை நோயாளிகள் தினம். சக்கரை நோய்க்கு முக்கிய காரணம் மது தான். மதுவினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கடந்த கதையெல்லாம் பற்றி இப்போது பேச வேண்டாம் நடக்கவிருக்கும் நடவடிக்கைகளை மட்டும் பார்ப்போம் என்று பரபரப்பாக கூறி சென்றார்.

Views: - 103

0

0

Leave a Reply