Categories: தமிழகம்

“ஓட்ட,ஒடசலான பேருந்துகள வச்சுக்கிட்டு இதெல்லாம் தேவையா?”திமுக அரசை சாடிய இபிஎஸ்!

தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ள அறிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி x தளத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஒப்பந்த அடிப்படையில் தனியார் மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களுக்கான ஒப்பந்தப் புள்ளியை விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை கோரியுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

புதிய பேருந்துகள் எதையும் கொள்முதல் செய்யாமல், ஓட்டை ஒடிசலான பேருந்துகளால் ஏற்கனவே போக்குவரத்துத் துறையை அதளபாதாளத்திற்கு தள்ளிய இந்த விடியா திமுக அரசு, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு படியாகத் தான் தற்போது ஓட்டுநர்-நடத்துனர் நியமனங்களை தனியார் வசம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மண்டலப் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தை தனியார்வசமாக்கும் எவ்வித முயற்சியாக இருப்பினும் அதனை கைவிட்டு,
முறையாக பணியமர்த்தி, போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போக்குவரத்துத் துறையின் கட்டமைப்பை சீர்செய்து பொதுமக்களுக்கு பயண “சேவை”யை வழங்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Sangavi D

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

7 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

8 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

10 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

11 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

12 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

12 hours ago

This website uses cookies.