அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்கும் பாஜக… திமுகவை பாஜக சும்மா விடாது… அதிமுக ரூட் கிளியர் : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு..!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 11:58 am

இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் நகரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது‌. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :- இன்னும் பத்து தினங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு திமுக அரசினை ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் போராடுகின்றனர். இந்த நிமிடம் வரை அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக தவம் கிடைக்கிறது. கூட்டணி வைத்துக் கொள்வதற்காக ஆள் மேல் ஆள் அனுப்பி வருகின்றனர். அதிமுக பலமாக இருப்பதால்தான் பாஜக நம்மை தேடுகிறது.

திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை இந்த முறை அதிமுக தான் களமிறங்குகிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய வேட்பாளரை பொதுச் செயலாளர் தேர்வு செய்துவிட்டார். பிஜேபி நம்மை தற்போது அட்டாக் பண்ணவில்லை, திமுகவை குழிதோண்டி புதைத்து விடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். பிரதமர் இந்த மாதிரி இறங்கி பேசினது கிடையாது.

அதற்குக் ஏற்ப இங்கு ஒரு அமைச்சர் சீனா ராக்கெட் உடன் விளம்பரம் போட்டுள்ளார். குலசேகரப்பட்டினத்தில் 2,233 ஏக்கர் அளவில் இஸ்ரோவின் ராக்கெட் தளம் அமைக்கப்பட்டுள்ளது என்றால் அதிமுக தான் முழுகாரணம். நிலத்தினை கையகப்படுத்தி கொடுத்த ஆட்சி அதிமுக தான். இந்த திட்டத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. கருணாநிதியின் கனவு நனவாக்க விட்டதாக கனிமொழி எம்பி கூறுகிறார். அவங்க கனவு கனவாக தான் இருக்கும். இதற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை.

திமுகவை பிஜேபி விடாது. அதிமுக ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்தி விட்டதை மக்களிடம் தெரிவித்தால் போதும். மோடியை மக்கள் பார்ப்பார்கள். ஆனால் ஓட்டாக மாறாது. தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் அதிகபட்சம் ஐந்து சதவீத வாக்குகள் தான் கிடைக்கும். திராவிட கட்சிகள் இல்லாமல் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை அமைச்சர் என்றால் அது கனிமொழி எம்.பி. தான். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவருமே டம்மி அமைச்சர்கள், திமுக என்றைக்கும் மரபுகளைப் பின்பற்றியதில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் டம்மி அமைச்சர்கள் இருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் தான். காரணம் கனிமொழி எம்பி வாரிசு, முதல்வர் குடும்பத்திலிருந்து வந்தவர். திமுக வாரிசு அரசியலுக்கு இது ஒரு உதாரணம்.

அதே போன்று தான் மரபுகளை மீறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகிறார். தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு சாதகமான அம்சம் உள்ளது. மக்கள் என்றைக்கும் விலை போக மாட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி மேல் இருந்த வெறுப்பில் திமுக வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பிஜேபி வளர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். அதை வரும் தேர்தலில் பார்ப்போம். அதிமுகவின் வளர்ச்சி இன்றைக்கு இமயமாக உயர்ந்துள்ளது. அத்தனை கட்சிகளும் கூட்டணிக்காக இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிமுகவை தேடி வரும் நிலை இருக்கும். ஒரு அரசியல் மாற்றம், திருப்பம் ஏற்படும் வெற்றி அதிமுகவிற்குத்தான், என்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி