மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தில் களமிறக்க தைரியம் இருக்கா..? பாஜகவுக்கு சவால் விட்ட அதிமுக..!!!
Author: Babu Lakshmanan1 March 2024, 1:59 pm
தமிழ்நாட்டை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்களை, தமிழகத்தில் எந்த தொகுதியிலாவது நிறுத்த பாஜகவிற்கு தைரியம் இருக்கிறதா..? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் K.P.முனுசாமி சவால் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ரவுண்டானாவில் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், அதிமுகவின் துணை பொதுசெயலாளர் கே.பி.முனுசாமி அவர் பேசுகையில், “தமிழகத்தை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் ஆட்சியில் உள்ளார்கள். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். உண்மையிலேயே பாஜகவிற்கு தைரியம், தில்லு இருந்தால் தமிழகத்தில் 2 அமைச்சர்களை எந்த தொகுதியிலாது நிறுத்துங்கள்.. தமிழக மக்கள் என்ன பாடம் புகட்டுவார்கள் தெரியவரும், என சவால் விடுத்தார்.