காமராஜர் பெயரை ஓட்டுக்காக பயன்படுத்தும் திமுக… அரசு திட்டங்களுக்கு தந்தையின் பெயரை வைப்பதிலே CM ஸ்டாலின் ஆர்வம் ; அதிமுக குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
15 July 2023, 1:20 pm

காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதிமுக., கழக அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏவுமான என். தளவாய் சுந்தரம் நாகர்கோவிலில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் காமராஜர் அவர்களை கலைஞர் கருணாநிதி மிகவும் மட்டமாக திட்டியவர் . ஆனால் காமராஜர் செய்த திட்டங்களில் ஒன்று கூட கருணாநிதி செய்யவில்லை.

தற்போது காமராஜர் பெயரை திமுக ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துகின்றனர். அம்மா உணவகத்தை படிப்படியாக மூட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் அவரது தந்தை பெயரை எங்கெல்லாம் வைக்க முடியுமோ, அங்கெல்லாம் வைக்கின்றனர். இது தான் அவர்கள் ஆட்சியின் சாதனை.

ஏற்கனவே அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. வரும் 2024 தேர்தலிலும் கூட்டணி தொடரும். மீண்டும் மோடி தான் பிரதமராவார் என்று ஸ்டாலினே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக எதிரி கட்சி அல்ல எதிர் கட்சி தான், எனக் கூறினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 397

    0

    0