டேபிளை தட்டி அழக் கூடியவர் துரைவைகோ… அதிமுக வேட்பாளர் அப்படிபட்டவர் அல்ல ; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 11:39 am

இன்னமும் நான்கு நாட்களுக்கு தொகுதியை சுற்றிவர கூடியவர் துரை வைகோ என்றும், ஆனால் தொகுதியில் நாளெல்லாம் சுற்றி வரக்கூடியவர் நமது வேட்பாளர் கருப்பையா என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இருசக்கர வாகன பேரணியை தப்பாட்டம், கரகாட்டம், பேண்ட் வாத்தியங்கள் இசை முழங்க புதுக்கோட்டையில் மிகப் பிரமாண்டமாக நடத்தினர்.

மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!

இந்தப் பேரணி புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்ட ரோடு ஷோ பிருந்தாவனம், மேல ராஜவீதி, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் டிவிஎஸ் கார்னர் வழியாக திலகர் திடலை வந்தடைந்தது.

இதன் பின்னர் திலகர் திடலில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது :- இன்னமும் 4 நாளைக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுற்றி வரக்கூடியவர் துரை வைகோ, ஆனால் தொகுதியில் நாளெல்லாம் சுற்றி வரக்கூடியவர் நமது வேட்பாளர் கருப்பையா. நம் மண்ணைச் சார்ந்தவர் கருப்பையா.

ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு இந்த மண்ணும் தெரியாது, தொகுதியும் கிடையாது. நமது வேட்பாளரை நம்ம தொகுதியில் நம்ம புதுக்கோட்டையில் நம்ம திருச்சியில் பார்க்கலாம். ஆனால், துரை வைகோவை திருச்சியிலோ, புதுக்கோட்டையிலோ பார்க்க முடியாது. விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியை தாண்டி போய் பார்க்க வேண்டும்.

நம்ம வேட்பாளர் சிரித்த முகமாக இருக்கக்கூடியவர். ஆனால் எதிர்க்கட்சி வேட்பாளர் துரை வைகோ டேபிளை தட்டி அழ கூடியவர். அதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஒரு நாளாக வந்து தனது மகனுக்கு வாய்ப்பு தாருங்கள் ஓட்டு போடுங்கள் என்று கேட்டாரா…? அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் புதுக்கோட்டைக்கு காவேரி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

ஆனால் இன்று 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு மாதத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்எல்ஏ நடவடிக்கை எடுக்கவில்லை, நகராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதெல்லாம் மாற வேண்டும் என்றால் இரட்டை இலை சின்னத்திற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நகராட்சி நிர்வாகம் சீர் கேட்டு உள்ளது.

மேலும் படிக்க: மேகதாது அணை கட்டுவதில் காங்., பாஜக உறுதி… காவிரி நீருக்கே வாய்திறக்காத CM ஸ்டாலின் ; இபிஎஸ் விமர்சனம்

இரண்டு அமைச்சர்கள், எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் ஆகியோர் செயல்படாமல் உள்ளனர். இதெல்லாம் சீர் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் கிடைக்கவில்லை, மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கவில்லை, அம்மா கிளினிக் இல்லை அம்மா உணவகம் இல்லை, சொத்து வரி மின்சார கட்டணம் ஆகியவையும் உயர்ந்துவிட்டது.

இன்னும் நான்கு நாளைக்கு யாரும் தீப்பெட்டியை எடுக்க வேண்டாம் திடீரென்று பத்திக் கொள்ளும், என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

இதை தொடர்ந்து பேசிய வேட்பாளர் கருப்பையா, இந்த மண்ணைச் சார்ந்த எனக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் இந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றால் மத்திய அரசோடும், மாநில அரசோடும் போராடி காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பொதுமக்களோடு சேர்ந்து போராடுவேன், என்றார்

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!