‘பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கனும்’… ஏவி ராஜுவுக்கு அடுத்தடுத்து நோட்டீஸ்… காவல்நிலையத்தில் கருணாஸ் புகார்..!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 5:11 pm

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த எம்எல்ஏ வெங்கடாசலம், நடிகை திரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் என்றும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் பெப்சி சங்கமும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். கவனம் ஈப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக , அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில் அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஏ.வி.ராஜுவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வெங்கடாசலத்தை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் ஏவி ராஜு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 309

    0

    0