அதிமுக நிர்வாகிகளை வீடு புகுந்து தாக்கிய பேரூராட்சி திமுக தலைவர்… ஒன்றுகூடிய மக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
20 April 2024, 1:35 pm

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகிகளை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் பேரூராட்சி உட்பட்ட கருங்கல்பட்டி கிராமத்தில் தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுகவை சேர்ந்த குழந்தை ராஜமாணிக்கம், சவரிமுத்து, ஞானமணி ஆகிய 3 பேரை அகரம் பேரூராட்சி திமுக தலைவர் நந்தகோபால் என்ற கருத்த மணி திமுக குண்டர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து பெண்கள் உட்பட மூன்று பேரை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க: பிரதமர் மோடி ஊழலை கற்றுத்தரும் பள்ளியை நடத்துகிறார் : VIDEO ஆதாரத்துடன் ராகுல் குற்றச்சாட்டு!

அப்போது மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து திமுக தலைவர் நந்தகோபாலை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்டனர். இதில், பயந்து போன திமுக தலைவர் நந்தகோபால் தப்பித்தால் போதுமே என நினைத்து, தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு குண்டர்களையும் அழைத்து காரில ஏறி தப்பி சென்றார் ஏறி தப்பி சென்றார்.

பாதிக்கப்பட்ட மூன்று பேரையும் ஊர் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக தலைவர் அதிமுகவினரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 256

    0

    0