அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்த சம்பவம்… தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 8:09 pm

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் வீச்சூர் ஊராட்சியில் ஊராட்சி துணைத் தலைவர் வைதேகி. இவரது கணவர் சுமன் வயது (39) இவர்களுக்கு மாதேஷ் (10) என்ற ஒரு மகன் உள்ளார். ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவர் விவசாயம் செய்வதாகவும், மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகியான சுமனுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் சங்கருடன் இருக்கும் சரண் என்பவருக்கும் உள்ளூரில் பணிகளை எடுத்து செய்வதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் சங்கரின் தம்பிதான் சுமன். அதாவது பெரியப்பாவின் மகன் தான் ஊராட்சி மன்ற தலைவரும், வழக்கறிஞருமாக இருப்பவர் சங்கர். அவருடன் இருப்பவர் சரண்.

இந்த நிலையில், ஊரில் உள்ள பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு தண்ணீர் டேங்க் அருகில், சுமன் பெருமாள் கோவில் திருவிழாவிற்காக சென்றதாகவும், அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் சிலர் சுமனை பின் தொடர்ந்து வந்து தலைமுகத்தில் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் இருந்த சுமனை உறவினர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும்போது சுமன் உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழாவில் சரண் என்பவரின் பெயரை சேர்த்து முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். அப்போது, சுமனின் அண்ணன் சுரேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஆகி அவரை அடித்துள்ளார். சுரேஷ்க்கு ஆதரவாக அவரது தம்பி சுமன் சரணை திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரண் சுரேஷின் தம்பியான ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சுமனை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், விச்சூர் பகுதியை சேர்ந்த கரண், சரண், நிதீஷ், புவனேஸ், எண்ணூர் திருநிலையை சேர்ந்த ராமு ஆகிய 5 பேரும் மணலி புதுநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

மேலும், கொலை சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞருமான சங்கர் என்பவரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், அவரை கைது செய்து, விசாரணைக்கு பின்னர், கொலையில் திட்டம் தீட்டியது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 287

    0

    0