அதிமுக ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் படுகொலை… குற்றவாளியை கைது செய்வதில் அலட்சியம் ; உறவினர்கள் தர்ணா போராட்டம்

Author: Babu Lakshmanan
12 February 2024, 2:13 pm

மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவரை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் ஊராட்சி துணைத் தலைவராக இருக்கும் வைதேகி கணவர் சுமன். இவர் கடந்த 02.10.23 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில், ஏழாவதாக கந்தன் என்பவரையும் போலீசார் கைது செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்று கூறி துணைத் தலைவரின் உறவினர்கள் மணலி புதுநகர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலையில் பாதிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட கணவருக்காக சாலையில் படுத்து புரண்டு போராட்டம் நடத்திய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் அவர்களின் உறவினரால் இந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, அவர்களின் உறவுக்கார பெண் ஒருவர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொள்வதற்காக முற்பட்டபோது போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!