அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் அங்கீகரிப்பு… பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய தொண்டர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 April 2023, 4:20 pm

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கோவையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டன.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதனை அங்கீகரித்திருந்தது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொது செயலாளராக அங்கீகரித்துள்ளது.

இதனை அடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ.மா.வேலுசாமி தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செ.மா.வேலுசாமி, தொண்டர்களின் உணர்வை மதித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது என்றும், எத்தனை இடர்பாடுகளை செய்தாலும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம், எளிய தொண்டராகிய சாதாரண ஒருவரை பொதுசெயலாளராக அறிவித்தது தொண்டர்கள் முதல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி எனவும், அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 338

    0

    0