மக்களை மதுபழக்கத்திற்கு அடிமையாக்கியதே விடியா திமுக அரசின் சாதனை ; கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு…!!!

Author: Babu Lakshmanan
30 March 2024, 12:54 pm

மதுவிலக்கிற்கு பதிலாக கூடுதலாக மது கடைகள் திறந்து தமிழக அரசு மக்களை மது பழக்கத்திற்க்கு அடிமையாக்கியதே சாதனை என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றிய பகுதியில் கயத்தாறு மேற்கு ஒன்றியம் செட்டி குறிச்சியில் துவங்கி திருமங்கலங்குறிச்சி, வடக்கு இலந்தைகுளம், தெற்கு இலந்தைகுளம், ஆத்திகுளம், மானங்காத்தான், அய்யனார்ஊத்து, கயத்தாறு பேரூராட்சி வார்டு பகுதி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசியதாவது :- சென்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தி.மு.க. ஆட்சி அமைத்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமல் என உறுதியளித்தார். ஆனால் மதுவிலக்கிற்கு பதிலாக கூடுதலாக மது கடைகள் திறந்து தமிழக அரசு மக்களை மது பழக்கத்திற்க்கு அடிமையாக்கியதே சாதனை.

போதை பொருட்கள் கடத்தல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளது. மேலும், அஇஅதிமுக-வில் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா உணவகம், லேப் – டாப் ஆகியவற்றை நிறுத்தி, பொதுமக்களுக்கு சொத்துவரி, பத்திர பதிவு பல மடங்கு உயர்த்தி வாழ்வாதாரத்தை சீர்குழைய செய்ததே திமுகவின் சாதனை. விடியல் தருவதாக கூறி பொதுமக்களை இருளில் தள்ளிவிட்டது. அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர், என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு ஒன்றிய பகுதிகளான அகிலாண்டபுரம், கடம்பூர், கொப்பம்பட்டி, காமநாயக்கன்பட்டி, தீத்தாம்பட்டி, சோழபுரம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 371

    0

    0