அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுகவினர் தாக்குதல்… மேட்டுப்பாளையத்தில் நடந்த போராட்டம் ; அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது!!
Author: Babu Lakshmanan2 November 2023, 6:49 pm
அதிமுக கவுன்சிலர்கள் மீது திமுகவினர் தாக்குதல்… மேட்டுப்பாளையத்தில் நடந்த போராட்டம் ; அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது!!
அதிமுக கவுன்சிலர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய அதிமுக எம்எல்ஏக்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த அக்டோபர் 31ம் தேதி நடந்த நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசியும் மைக்கை உடைத்தும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
மோதலுக்கு காரணமான திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவை சேர்ந்த 4 பெண் கவுன்சிலர்கள் உட்பட 8 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 நாட்களாக நகர்மன்ற கூட்ட அரங்கில் அமர்ந்து இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். நகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறையினர் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நகர மன்ற கூட்டத்தில் நடைபெற்ற மோதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுக கவுன்சிலர்கள் கோரி வந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததை அடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்ற உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
நகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வந்திருந்த அதிமுகவை சேர்ந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் அருண்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.