ராகுல் குறித்த வீடியோ விவகாரம்.. செல்லூர் ராஜு டுவிட் போட்டதே இதுக்காகத் தான் ; ராஜன் செல்லப்பா விளக்கம்!!

Author: Babu Lakshmanan
22 May 2024, 1:43 pm

ராகுவ் காந்தி குறித்து ஆய்வு செய்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்தை சொல்லி இருக்கிறார் தவிர, அரசியல் ரீதியாக அவர் கருத்து சொன்னதாக நான் கருதவில்லை என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பால்குடம் சுமந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா செல்லப்பா தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை பூமி பூஜை குறித்த கேள்விக்கு, “தாமதமாக தொடங்கப்பட்டாலும் மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கிராமப்புறங்களில் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட33 மாதத்தில் முடித்தாலே போதுமானதாக என்று நாங்கள் கருதுகிறோம். அதற்கான வழிவகைகளை இந்த அரசு ஆராய்கிறதா இல்லையா என்பதை அதிமுக மிகச் சிறப்பாக தங்களது பணியினை ஆற்றுவார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் எல்லாம் கிடையாது… நாங்குநேரி காவலர் மீது நடவடிக்கை எடுங்க ; போக்குவரத்துத்துறை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து முன்னறிவிப்பு அறிவித்தும் பேரிடர் மேலாண்மை துறை ஏதும் செயல்படாதது குறித்த கேள்விக்கு, “இந்த அரசு பொறுப்புக்கு வந்த பிறகு கவனம் இன்மை தொடர்ந்து இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேரிட மேலாண்மை துறையில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. தினந்தோறும் கடலில் குளிக்கிறவர்கள். குளத்தில் குளிக்கிறவர்கள், குவாரி கிணற்றில் குளிக்கிறார்கள் என்று தினந்தோறும் இறப்புகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திமுக அரசாங்கம் தவறு இருக்கிறது. போக்குவரத்து விபத்து, பட்டாசு விபத்து, தீ விபத்து போன்ற விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன, ஏற்கனவே சட்ட ஒழுங்கு சீர்கேடு கிடைக்கிறது பகலிலே கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை பேரிடரை தடுப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பட்டாசு,மழை,குற்றால அருவி விபத்துகளை தவிர்ப்பதற்கு இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள், எனக் கூறினார்.

பாஜக மூத்த தலைவர்கள் தமிழர்களை தமிழ்நாட்டில் பெருமையாக பேசுவதும் பிற மாநிலங்கள் தமிழர்களை திருடர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசுவது குறித்த கேள்விக்கு, “விகே பாண்டியன் இன்று நேற்று செல்லவில்லை, அவர் பத்து வருடங்களுக்கு முன்னதாக அவரு அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். விகே பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரியாக போனாரே தவிர, அவர் அரசியல்வாதியாக செல்லவில்லை. பாஜக அமித்ஷா விமர்சனம் செய்தது தமிழக மக்களை மட்டும் அல்ல, ஒரு தமிழரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதை நாங்கள் கருதுகிறோம். பிகே பாண்டியன் மிகவும் அறிவுள்ளவராக அங்குள்ள மக்கள் கருதப்படுகிறார்கள். அமித்ஷா பேசியது எங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வருத்தம் தான், அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்,” என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது குறித்த கேள்விக்கு, “இது அவரின் தனிப்பட்ட கருத்து. ராஜீவ் காந்தி குறித்து ஆய்வு செய்து கருத்தை சொல்லி இருக்கிறார் தவிர அரசியல் ரீதியாக அவர் கருத்து சொன்னதாக நான் கருதவில்லை. திமுகவை ஆதரித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியில் அவர் இருக்கிறார் அவர் தனிப்பட்ட முறையில் கூறி இருப்பார்களே தவிர, அரசியல் ரீதியாக கருத்துக்களை சொல்லி இருக்க மாட்டார். அவர் மனதில் பட்டதை சொல்லி இருக்கிறார். ஆனால் அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆறாம் ஏழாம் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்த கருத்தை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் என்று தெரியவில்லை. செல்லூர் ராஜு எல்லோரையும் வாழ்த்துவதில் அவர் தயங்க மாட்டார். அந்த வகையில் வாழ்த்தியிருக்கிறாரே தவிர, அரசியல் ரீதியாக வாழ்த்தியதாக நாங்கள் கருதவில்லை,” எனக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ராகுல் காந்தி குறித்து பேசியது ஜூன் 4-ன் முன்னோட்டமாக இருக்குமா என்பது குறித்த கேள்விக்கு, “இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை அவர் அதிகமாக புத்தகம் படிப்பார் மற்றும் ஊடகம் பார்ப்பார். அதிலிருந்து கருத்துக்களை சொல்லி இருப்பாரே தவிர நாங்கள் தேசிய கட்சியை விரும்பவில்லை. பாஜகவை இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி அதிமுக அவைகளை விரும்புவதில்லை அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் விரும்பவும் இல்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை. தமிழ்நாட்டுக்கு என்று உணர்வு தமிழ்நாட்டுக்கு என்று உரிமை பாதுகாப்பு தவிர, எல்லா வகையிலும் எதிர்பார்ப்புகளை தவிர, இந்திய அளவில் போராடுவதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கான விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, என்றார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 248

    0

    0