என்ன செஞ்சீங்கனு விழுப்புரத்துக்கு ஆய்வு செய்ய வரீங்க? உதயநிதிக்கு சி.வி சண்முகம் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2024, 3:59 pm

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் அமமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் குமரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் சிவி சண்முகம் முன்னிலையில் இணைந்தனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கோபாலபுர குடும்பத்தின் வாரிசாக தேர்வு செய்யபட்டுள்ள துணை முதலமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து வருகின்ற 6 ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளார்.

நான்கு ஆண்டுகளில் திமுக அரசு விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்து இருக்கிறார்கள் என்ன வளர்ச்சி பெற்று இருக்கிறது விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி அடைவதற்கு எதாவது செய்திருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டு ரத்து செய்யபட்டுள்ளது. மேட்டூர் அனையிலிருந்து குடிநீர் கொண்டு வர திட்டத்தினை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனை என்றும் கடலூரில் மீன்பிடி துறைமுகம் அறிவிக்கப்பட்டது முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: அடிக்கடி கோவை பக்கம் வாங்க முதல்வரே : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நக்கல்!

பக்கிங்காம் கால்வாய் தூர்வாரி கரைகரைகளை பலப்படுத்தி சென்னைக்கு குடிநீர் செல்லும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

குடும்பம் வளர்ச்சி அடைவதற்கு ஆட்சி செய்கிற திமுக அரசு என்ன வளர்ச்சியை விழுப்புரம் மாவட்டதிற்கு கொண்டு வந்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

ஆறாக பெருகி ஓடுகிற கள்ளச்சாராயம், கஞ்சா, போதைமாத்திரைகளை கட்டுப்படுத்த தவறிய செயல்படாத காவல்துறையை முதலில் செயல்பட முயற்சி எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

விழுப்புரம் நகரத்திற்கு கொண்டு வரவேண்டிய டைட்டல் பார்க்க எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் புதுச்சேரி அருகே கொண்டு செல்லப்பட்டதால் வேலைவாய்ப்பு இல்லை என கூறினார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?