கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
Author: Udayachandran RadhaKrishnan30 December 2024, 11:14 am
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும்’ அந்த மாணவி புகாரில் தெரிவித்து உள்ளார்.
அந்த சார் யார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் காவல் துறை உயரதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன் மட்டும் தான் என்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டு உள்ளனர் என தெரிவித்தவர், ஞானசேகரன் தி.மு.க வை சேர்ந்தவராக இருப்பதாக தகவல் வருவதாகவும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டவுடன், அவர் பெயர் இடம்பெற்ற பேனர்கள், நோட்டீஸ்கள் கிழிக்கப்பட்டு உள்ளன.
இதையெல்லாம் பார்க்கும் போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது” என்று தெரிவித்து இருந்தார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளது என்றவர், இதன் இடையே அ.தி.மு.க வினர் ‘யார் அந்த சார்?’ என போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
கோவை மாநகரில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு மாவட்டங்களிலும் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளது குறிப்பிட்டது.