கோவை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ; மேயர் ராஜினாமா செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் காலி குடங்களுடன் போராட்டம்.!

Author: Babu Lakshmanan
30 June 2023, 12:39 pm

கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்து மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்னர் அதிமுக கவுன்சிலர்கள் 38வது வார்டு ஷர்மிளா, 47வது வார்டு பிரபாகரன், 90வது வார்டு ரமேஸ் ஆகியோர் மாநகராட்சி கூட்டம் நடைபெற்று வரும் விக்டோரியா மஹால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததை கண்டித்தும், மேயர் கல்பனா தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

  • Aamir Khan salary model 20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!