முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார் ; அதிமுக பிரமுகர்கள் கைது – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!!

Author: Babu Lakshmanan
6 October 2023, 10:57 am

பொள்ளாச்சியில் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரப்பிய அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த அருண்குமார் என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த பொள்ளாச்சி ஜோதி நகரை பகுதி சேர்ந்த ஷனாவாஸ் என்பவர் பார்த்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தமிழக முதலமைச்சரை மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுடத்தை தவறாக பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

இந்தநிலையில், அதிமுக பிரமுகர் அருண்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை அதிமுக தேர்தல் பிரிவு செயலாளாரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அருண்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…