நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Author: kavin kumar
30 January 2022, 10:26 pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் களை கட்ட துவங்கி உள்ளது. பிரபல அரசியல் கட்சிகள் போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சிகள், மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் மாநகராட்சி, நகராட்சி போன்றவை குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடயே அ.தி.முக அதன் கூட்டணி கட்சியானபா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது.

அதில், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 43 வார்டுகளில் அ.தி.மு.க.,போட்டியிடுகிறது. விழுப்புரம் 42, திண்டிவனம் 33,சிதம்பரம் 33, விருத்தாச்சலம் 33 , தருமபுரி 31 , பண்ருட்டி, 30 ,நெல்லிகுப்பம் 29, திட்டக்குடி 24, ஆகிய நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

  • Sex is for pleasure, not for having a baby: Famous actress's bold comment உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!