தமிழகத்திற்கு பிரதமர் பறந்து பிறந்து வந்தால் மட்டுமே ஆட்சியை பிடித்து விட முடியுமா..? பாஜக குறித்து அதிமுக விமர்சனம்!!
Author: Babu Lakshmanan12 March 2024, 2:51 pm
மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது என்றும், தமிழகத்திற்கு பறந்து பிறந்து வந்தால் மோடி ஆட்சியைப் பிடித்து விட முடியுமா…? என அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை ஒழிக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பேருந்து நிலையம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அப்போது முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசும்போது, “மத்திய அரசுக்கு முதுகெலும்பே கிடையாது. தமிழகத்திற்கு மோடி பறந்து பறந்து வந்தாலும் ஆட்சியைப் பிடித்து விட முடியுமா..? அரிசி விலையை கூட்டி விட்டீர்கள். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு மக்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.