இரண்டே வருடத்தில் இத்தனையாயிரம் கோடிகளா..? திமுகவினர் சொத்துப்பட்டியல்… தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கம் ; வைகைச் செல்வன்..!!

Author: Babu Lakshmanan
15 April 2023, 1:59 pm

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீப்பை மக்கள் எழுத வேண்டும் என்று தாம்பரத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பின்பு முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் இலக்கிய அணி சார்பில் தாம்பரம் மெப்ஸ் அருகே அமைக்கபட்டிருந்த தண்ணீர் பந்தலை அதிமுக இலக்கிய செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திறந்து வைத்தார்.

பின்பு கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அவதிபடும் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினார். இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது :- அண்ணாமலை திமுக ஊழல் பட்டியிலை வெளியிட்டுள்ளார். இந்த ஊழல் பட்டியல் தமிழ்நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஊழல் கட்சியினர் திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இத்தனையாயிரம் கோடிகளை கொள்ளையடித்துள்ளனரா என்று நாட்டு மக்கள் திகைத்து போய் உள்ளனர்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தீர்ப்பை மக்கள் எழுத வேண்டும். மாநாடு நடத்துவதற்காக ஓபிஎஸ் எது நடத்தினாலும் சரி, அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக மிகப்பெரிய மாநாட்டை நடத்த போகிறது. நாளை நடைபெறவுள்ள செயற்குழுவியிலேயே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாடு குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளார். எனக் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்