ரூ.1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார் ? அமைச்சரின் சொந்த ஊரில் அலற விட்ட அதிமுக!!
Author: Udayachandran RadhaKrishnan27 March 2025, 4:43 pm
தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை கண்டித்து அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமிய விரோதியா? திமுகவை திக்குமுக்காட வைத்த அதிமுக!
அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், அந்த தியாகி யார் ? 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார் ? என்றும் டாஸ்மாக் ஊழல் பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் 1000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் 40,000 கோடி ஊழலா என மக்கள் கேள்வி ? 1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார் ? என்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஸ்டாலின் அரசு அமைச்சர் செந்தில்பாலாஜி சொந்த ஊரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ஒரு சில இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது.