அதிமுக கொண்டு வந்த அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை முடக்க முயற்சி ; இது திமுகவின் திட்டமிட்ட செயல்… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

Author: Babu Lakshmanan
28 November 2022, 7:49 pm

கோவை : அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டத்தை திட்டமிட்டு முடிக்கவே, சிட்கோ தொழில்பேட்டையை திமுக அரசு அமைக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 3731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி டிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி அன்னூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது. காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி தலைமையில் கோவையை சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி அருண்குமார், வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி, அவிநாசி எம்.எல்.ஏ. தனபால், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி என 5 சட்டமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவை தெரிவித்தனர்.பின்னர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது :- அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் 60 ஆண்டுகள் கனவு திட்டமான அவிநாசி -அத்திகடவு திட்டத்தை நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிட்கோ தொழில்பேட்டையை திட்டமிட்டே தமிழக அரசு கொண்டு வருகிறது.

அன்னூரில் சிட்கோ அமைக்க அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது. அதற்காக விவசாயிகளுக்கு அதிமுக தோல்கொடுத்து போராடும். மேலும் இது சம்பந்தமாக வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தங்களது எம்.எல்.ஏக்கள் மூலம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும், எனவும் அவர் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 468

    0

    0