‘இதுதான் இறுதி எச்சரிக்கை’… ஓபிஎஸ் தரப்புக்கு போஸ்டர் அடித்து ஒட்டி வார்னிங் கொடுத்த அதிமுகவினர்…!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 10:48 am

ஒபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என சிவகங்கை மாவட்ட அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்து போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பினரில் சிலர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருகின்றனர். இது எடப்பாடி தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்து, திருப்புவனம் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

போஸ்டரில், ‘அதிமுக கொடி, சின்னத்தை பயன்ப டுத்தும் ஓபிஎஸ் தரப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும்’ என எழுதப்பட்டிருந்தது. இது அப்பகுதி ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 341

    0

    0