திருச்சியில் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழா கூட்டத்தில் வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவதால் பரபரப்பு நிலவியது.
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 46வது ஆண்டு விழா நேற்று மத்திய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள சீனிவாச மகாலில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர். விழா கூட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பேசத் தொடங்கினார்.
அப்போது, விழா நடந்த அரங்கிற்கு அருகே உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விழா நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர், நேரமாகிறது சாப்பாடு போடுங்கள் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வரிசையில் நின்று உணவுகளை வாங்கி பஃபே சிஸ்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக இருந்ததால் சாப்பாடு இடத்தில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதை கவனித்த வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர் கிஷோர்குமார் நேரடியாக களத்தில் இறங்கி உணவுகளை வரிசையில் நின்று வாங்குமாறு நெறிமுறைப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது. சிவகுமார் என்ற ஜூனியர் வழக்கறிஞர் திடீரென வரிசையில் புகுந்து சாப்பாடு வாங்க முன்னேறி சென்றார். இதை கவனித்த அவர் வரிசையில் வருமாறு கூறினார்.
இதை தொடர்ந்து அங்கு வழக்கறிஞர்களுக்குள் காரசாரகமான விவாதமும், அடுத்தடுத்து கைகலப்பும் ஏற்பட்ட நிலையில், அங்கு அமர்ந்து சாப்பிட போடப்பட்டிருந்த சேர்களை ஒருவர் மீது ஒருவர் தூக்கி சினிமா பாணியில் எறிந்தனர். ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் சம்பவமும் நடந்தது. அதில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் பொருளாளர் கிஷோர்குமார் மீது சாம்பார் வாளி கவிழ்ந்து உடல் முழுவதும் சாம்பாராக இருந்தது.
பிறகு மேடையில் இருந்து கீழே வந்த சங்கத்தின் செயலாளர் வெங்கட், கிஷோரை தாக்கிய வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தினார். இப்படியாக 30 நிமிடங்களுக்கு மேல் ஒருவர் மீது ஒருவர் தாக்குவதும், அடிப்பதும் என விழா நடந்த அரங்குக்கு அருகே இருந்த உணவு கூடத்தில் பெரும் பரபரப்பும் கலவரமும் ஏற்பட்டது.
தொடர்ந்து தாக்குதலை காயப்பட்ட வழக்கறிஞர் கிஷோர்குமார் திருச்சி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வக்கீல்கள் தொடர்ந்து ஒருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் இதை காவல்துறையினரோ கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, அவர்களுக்குள் அடித்துக் கொள்வார்கள், நாம் சென்று கேட்டால் நம்மை எதிர் கேள்வி கேட்பார்கள், என்று பதில் வந்தது. இந்த அடி தடி சம்பவம் குறித்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.