கலெக்டர் ஆபீஸ் வரை சென்ற சூரி விவகாரம்.. மதுரையில் வெடித்த பூகம்பம்!

Author: Hariharasudhan
30 December 2024, 4:58 pm

சூரியின் அம்மன் உணவகம் சுகாதாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக வழக்கறிஞர் ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மதுரை: மதுரையைச் சேர்ந்த பிரபல நடிகர் சூரியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான அம்மன் உணவகம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 2022ஆம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறையால் 434 சதுர அடி பரப்பளவில் ஒப்பந்தம் போடப்பட்டு, உணவகம் இயங்கி வருகிறது.

இதனிடையே, அம்மன் உணவக நிர்வாகத்தினர், மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில், கழிவுநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி, கூடுதலாக 350 சதுர அடிக்கு நிரந்தரமாக செட் அமைத்தும், 360 சதுர அடி திறந்தவெளியை ஆக்கிரமிப்பும் செய்துள்ளதாகக் கூறி வழக்கறிஞரான முத்துக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்தார்.

இந்தப் புகாரில், “அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள செப்டிக் டேங்குகளின் நடுவே காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவுப் பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. ஆனால், எலி, கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது.

Soori hotel

செவிலியர் விடுதியின் ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதால், அங்கு தங்கியிருக்கும் செவிலியர் மற்றும் செவிலிய ஆசிரியைகள் ஜன்னலைத் திறக்க முடியாமல், எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். இதனால், அங்கு தங்கியுள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அம்மன் உணவகத்தின் அருகில், குழந்தைகள் நல தீவிர சிகிச்சைப் பிரிவும், பிரசவ வார்டும் இருக்கிறது. இதனால், கழிவுநீர் தொட்டிகளின் நடுவிலும், பெரிச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரம் இல்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் நோய்த்தொற்று உருவாகும் நிலை உள்ளது.

இதையும் படிங்க: தங்கங்களா..அண்ணன் உங்களுக்கு பாம்பு ஷோ காட்ட போறேன் : வைரலாகும் TTFவாசன் வீடியோ.!

இதுபோன்று, சட்டத்திற்குப் புறம்பாக பொதுப்பணித் துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும், தரமற்ற வகையில் உணவுகளைத் தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் அம்மன் உணவகத்தில், அதிகாரிகள் ஆய்வு செய்து, சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டது என அம்மன் உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தனியார் ஊடகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • TTF Vasan snake video controversy பாம்பு மட்டும் தானா…TTF வாசன் வீட்டில் வனத்துறையினர் அதிரடி சோதனை..!
  • Views: - 55

    0

    0

    Leave a Reply