தனக்காக வாதாடிய வக்கீல் கொலை.. குமரியில் டபுள் கேம்!

Author: Hariharasudhan
7 November 2024, 2:32 pm

தனக்காக வாதாடிய வழக்கறிஞர் எதிர்தரப்புடன் சேர்ந்து இரட்டை வேடம் போட்டதால் கொலை செய்ததாக கொலை செய்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணையைத் துவக்கி உள்ளனர். இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டது வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபி (50) என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரிக்கையில், திருப்பு விசாகம் பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபியை ஒரு வழக்கு தொடர்பாக சந்தித்து உள்ளார். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்ற கிறிஸ்டோபர் வாதாடி வந்த நிலையில், இந்த வழக்கின் போக்கு கடந்த சில மாதங்களாக இசக்கிமுத்துவுக்கு சாதகமாக அமையவில்லை எனத் தெரிகிறது.

எனவே, இது குறித்து இசக்கிமுத்து கிறிஸ்டோபர் சுகுவிடம் வழக்கு தொடர்பான நடவடிக்கை குறித்து கேட்டுள்ளார். ஆனால் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சரிவர பதில் அளிக்காமல் இருந்ததால், இசக்கிமுத்து சந்தேகமடைந்து, வழக்கறிஞர் கிறிஸ்டோபரின் நடவடிக்கைகளை ரகசியமாக கவனிக்கத் தொடங்கி உள்ளார்.

CRIMESCENE

அதில், கிறிஸ்டோபர், தன்னிடம் பணம் வாங்கிக்கொண்டு, எதிர் தரப்புக்கு சாதகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை தருமாறு கிறிஸ்டோபரிடம் கேட்டுள்ளார். இந்த நிலையில், இசக்கி முத்து வீட்டில் இருவரும் மது அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவர் பலி; என்ன நடந்தது?

அப்போது கிறிஸ்டோபருக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, கிறிஸ்டோபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை பீமநேரி அருகே உள்ள குளத்தின் கரையோரம் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்

மேலும், தற்போது இசக்கிமுத்து போலீசில் சரணடைந்து இதனை வாக்குமூலமாக அளித்துள்ளார். எனவே, இசக்கிமுத்துவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 434

    0

    0