மதுவை விற்று தமிழக குடும்பங்களை நாசமாக்கும் ஸ்டாலின் அரசு ; சகோதரியுடன் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் நந்தினி கைது!!!

Author: Babu Lakshmanan
10 June 2023, 1:59 pm

மதுரையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை காந்தி அருங்காட்சியர் முன்பு வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது சகோதரியான நிரஞ்சனா ஆகியோர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, கையில் பாதகையை ஏந்தியிருந்தனர்.

அதில், ‘வெள்ளைக்காரனை விட மோசமாக இந்திய மக்களை கொள்ளையடித்து அம்பானி-அதானிகளை மட்டும் வளர்க்கும் மோடி அரசு. டாஸ்மாக் போதை விற்று தமிழ்நாட்டின் குடும்பங்களை நாசமாக்கும் மு.க.ஸ்டாலின் அரசு,’ என்கிற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!