காய்ச்சலால் பாதிப்பா…? பள்ளி மாணவர்களுக்குகு சலுகை : அமைச்சர் பொன்முடி வெளியட்ட முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 5:12 pm

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் சுகாதாரத்துறை சார்பில்  நடத்தப்பட்டு வருகிறது.

அதன் படி விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் காய்ச்சல் மருத்துவ முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு இன்று தொடங்கி வைத்து மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் விக்கிரவாண்டி  எம்.எல்.ஏ புகழேந்தி ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்வைன் ப்ளு காய்ச்சலால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்ச்சலுக்கு தேவையான மாத்திரை மருந்து இருப்புகள், தேவையான அளவு உள்ளதாகவும், காய்ச்சலுக்கென்று தனி வார்டு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் இரண்டு நாட்கள் மாணவர்களுக்கு விடுப்பு எடுத்துகொண்டு மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக கூறினார்.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…