குழந்தை மீது பாசம்..நாடகத்தை அரங்கேற்றிய தாய் : கிணற்றில் கிடந்த பிஞ்சுக் குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 10:04 pm

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

இவர் சத்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மாத குழந்தை உள்ளது. குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் மருத்துவமனையில் இருந்து 2 நாள் முன்புதான் வீட்டிற்கு வந்தனர்.

குழந்தை மீது கணவர் ரமேஷ் அதிக பாசம் கொண்டிருந்தார். இந்நிலையில் ரமேஷ் பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழாவுக்கு நேற்று தீமித்தார்.

இவரோடு உறவினர்களும் வெளியில் சென்று விட்டனர். ரமேஷ் மனைவி சத்யா நேற்று மாலையில் வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது குழந்தை காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் குழந்தை அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 1மாத குழந்தையின் சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து சத்யாவிடம் விசாரணை செய்ததில் தனது 1 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

தொடர்ந்து வழக்கு பதிவு செய்து சத்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் குழந்தையின் மீது கணவர் அதிக பாசம் வைத்ததாலும், குழந்தை எதிர்காலத்தில் ஊனமாக மாறலாம் என்று கருதியும் குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு குழந்தை மாயமானதாக கூறி தேடுவதை போன்று நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?