அண்ணாமலைக்கு ரொம்ப பயம்.. அதனாலதான் இலங்கைக்கு ஓடிவிட்டார் : காங்கிரஸ் எம்பி தாக்கு!!
Author: Udayachandran RadhaKrishnan11 பிப்ரவரி 2023, 5:48 மணி
விருதுநகர் மாவட்டம் மீசலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட M. செவல்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ 7,50,000 மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர்அவர்கள், மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட் பொதுமக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட் ஆகவும் மேலும் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அதானிக்கான பட்ஜெட் ஆக இருக்கிறது என்றும், இந்த பட்ஜெட் 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய பட்ஜெட் ஆக இருக்கிறது.
100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஏறக்குறைய 9000 கோடி நிதியை குறைத்திருக்கின்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஏழை எளிய மற்றும் உழைப்பவர்களின் வலியைப் பற்றி சிந்தனை இல்லாத பட்ஜெட் ஆக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களுடைய கடும் உழைப்பை அதானி அவர்களை 609வது இடத்திலிருது உலகத்தினுடைய இரண்டாவது பணக்காரராக முன்னேற்றுவதற்கு உழைத்து இருக்கிறார்கள் என்றும் அனைத்து துறைகளிலும் அதானினுடைய நலனுக்காக செயல்பட அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது என்றும்,
ராகுல் காந்தி அவர்களை உள்ளத்தாலும் உணர்வாளும் மோடி அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றும், கடந்த 20 வருடங்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுவிட்டது என்றும் ஆனால் இந்தியாவில் வாழ்க் கூடிய ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்றும், மேலும் அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய சட்டப்பூர்வமான உரிமைகளை மத்தியில் ஆளும் மோடி அரசு மறுக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிட பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ள அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.
அதிமுவை சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என நான்கு கூறுகளாக்கிய பங்கு பாஜகவை சாரும் என்றும் மாணிக்கம் தாகூர் பேட்டியின் போது தெரிவித்தார்.
0
0