40 ஆண்டுகளுக்கு பிறகு… நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!!!

Author: Babu Lakshmanan
14 October 2023, 9:32 am

நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை “செரியாபாணி” பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

நாகையில் காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் கப்பல் போக்குவரத்து சேவை துவக்க விழா நிகழ்வில் துறைமுக கப்பல் மற்றும் நீர் வழிகள் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பானந்த சோனாவால் மற்றும் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றனர்.

150 பயணிகள் அமரக்கூடிய வசதியுடன் கூடிய செரியாபாணி கப்பலில் பயணிக்க 50 பேர் முன்பதிவு செய்து இருந்த நிலையில் இன்று இலங்கைக்கு புறப்பட்டனர். பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் உட்பட பாஸ்போர்ட் விசா உள்ளிட்டவற்றை சோதித்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பயணம் செய்யும் நபர் ஒருவர் 50 கிலோ எடையிலான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் முனையத்தினை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் காவல்துறை சார்பில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கார்த்திகேயன் தலைமையிலான 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 512

    0

    0