50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வு : பச்சை நிறத்தில் நடக்கும் அதிசயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2023, 4:48 pm

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு வானில் நடக்கக்கூடிய அரிய நிகழ்வை மக்கள் எப்படி காண முடியும் என்பதை விஞ்ஞானி விளக்கி கூறியுள்ளார்.

வானில் நிகழும் அரிய நிகழ்வு வால் நட்சத்திரங்கள். நீள் வட்ட பாதையில் அவை பயணிப்பதால் அவை சூரியனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கடந்து செல்லும்.

அப்போது அவை பூமியில் மனிதர்களின் கண்களுக்கு புலப்படும் இதுவரை 6500-க்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு மிக அருகில் C2022e3 ZTF என்ற மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள வானியல் ஆய்வு மையத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. இது தற்போது சூரியனை கடந்து வந்து கொண்டிருக்கிறது 50,000 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்ல வருகிறது.

ஜனவரி 30 ,31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் பூமிக்கு மிக அருகில் அதாவது கிட்டத்தட்ட 4 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பூமியை இந்த வால் நட்சத்திரம் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை நெருங்கும் போது வினாடிக்கு சுமார் 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வடக்கு திசையில் சூரியனின் மறைவுக்கு பிறகு வால் நட்சத்திரத்தை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை கடந்து செல்லும்போது இரவில் வெறும் கண்ணாலும் பகலில் மற்றும் தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியும். அதிக பிரகாசமாக இருந்தால் தெளிவாகவே வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கொடைக்கானலில் மேக மூட்டம் அந்த தேதிகளில் இருப்பதால் கொடைக்கானலில் இருந்து பார்க்க முடியாது எனவும் தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர் .

  • Sobhana’s missed roles in Tamil cinema நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!
  • Views: - 562

    0

    0