திருமணமாகி 9 மாதத்தில்.. நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் தர்ணா : வேடிக்கை பார்த்த காவல்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2024, 5:19 pm

திருமணமாகி 9 மாதத்தில்.. நடுரோட்டில் அமர்ந்து இளம்பெண் தர்ணா : வேடிக்கை பார்த்த காவல்துறை!

வேலூர் மாவட்டம் வேலூர் சின்ன அல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது,

இவர்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து கணவன் மனைவியிடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது மேலும் இவரது கணவர் மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும் கொலை மிரட்டல் கூறப்படுகிறது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திடீரென பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அழைத்துச் செல்ல கூட போலீசார் காவல் நிலையத்தை விட்டு வெளியே வரவில்லை.

மேலும் படிக்க: திமுவினரின் செல்போன்களை ஒட்டு கேட்கும் மத்திய அரசு? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்!

இந்த நிலையில் அவரது உறவினர் பெண் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்றார்

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர், வேலூரில் முக்கிய பகுதியான வேலூர் அண்ணா சாலையில் காவல் நிலையம் எதிரில் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 532

    0

    0