9 மாதமாக ஃப்ரிட்ஜில் கிடந்த உடல்.. லிவிங் டுகெதர் காதலன் ஷாக்!

Author: Hariharasudhan
11 January 2025, 3:17 pm

லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணைக் கொன்று 9 மாதங்களாக ஃப்ரிட்ஜில் வைத்திருந்த காதலன் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் அடுத்த விருத்தவன் காலனி பகுதியில் வசித்து வந்தவர் பிங்கி பிரஜாபதி. இவர் சஞ்சய் என்பவர் உடன் லிவிங் டுகெதரில் வசித்து வந்தார். இவ்வாறு இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக லிவிங் முறையில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பிங்கி, சஞ்சயிடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறி உள்ளார். ஆனால், இதற்கு சஞ்சய் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சஞ்சய், தனது நண்பர் வினய் என்பவருடன் சேர்ந்து பிங்கியை பலமாகி தாக்கி உள்ளார். இதில் அப்பெண் உயிரிழந்துள்ளார். ஆனால், இந்தக் கொலையில் இருந்த தப்பிக்க முயன்ற சஞ்சய், வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அப்பெண்ணின் உடலை 9 மாதமாக வைத்துள்ளார்.

Woman body found in MP

இந்த நிலையில், சமீபத்தில் அங்கு மின்சார பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த குளிர் குறைந்து, அழுகிய உடலின் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: கணவரை இழந்த பெண்ணுடன் பலமுறை உறவு.. திமுக பிரமுகர் மீது வழக்கு!

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டியில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சஞ்சய் மற்றும் வினய் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

  • Ilaiyaraaja blesses Arivu marriage திடீரென காதலியை கரம் பிடித்த இளம் பாடகர்…ஓடி சென்று வாழ்த்திய இளையராஜா…!
  • Leave a Reply