ஹெலிகாப்டரில் ஏறிய பின் உயிரே போய் வந்துச்சு.. கர்ப்பிணி பெண் மீட்பு குறித்து அனுபவங்களை பகிர்ந்த தாயார்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 10:43 am

ஹெலிகாப்டரில் ஏறிய பின் உயிரே போய் வந்துச்சு.. கர்ப்பிணி பெண் மீட்பு குறித்து அனுபவங்களை பகிர்ந்த தாயார்!!

தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டமே வெள்ள காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சி கீழத்தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் அனுஷ்யா மயில் பெருமாள்(27) என்ற 9 மாத கர்ப்பிணி பெண் சிக்கினார்.

இரண்டு மாடி அளவிற்கு வெள்ளநீர் தேங்கியால் என்ன செய்வது என்று தெரியாது திக்குமுக்கு ஆடியுள்ளனர். இதை எடுத்து அனுசியா மயிலின் தாயார் மொட்டை மாடிக்கு சென்று உதவி கிடைக்குமா என்று தேடி உள்ளார்.

இந்த நேரத்தில் கோவை சூலூரில் இருந்து மீட்புப் பணிக்கு சென்ற ஹெலிகாப்டரை பார்த்து கை தூக்கி உதவி கேட்டுள்ளார். இதை அறிந்த மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணி பென்னை பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் அனுசுயா மயில் (வயது 27 )சேது லட்சுமி (வயது 54 )தாஸ் வருண் (வயது 11) அனுசியா கணவர் பெருமாள் ஆகிய நான்கு பேரும் மதுரை கொண்டு வரப்பட்டனர். கர்ப்பிணி பெண் அனுசியா மயில்
தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்ப்பிணி பெண்ணின் தாயார் சேது லட்சுமி பேசும் போது எங்களது ஊர் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சி. இதுவரை பார்க்காத மழை பெய்ததால் வீட்டை சுற்றி தண்ணீர். உடனே காரை பிடிச்சு பக்கத்து ஊரான வைக்குன்டம் வந்ததும் அங்கும் தண்ணீர் சூழ்ந்தது. சொந்தக்கார வீட்டிற்கு போனோம்.

இரண்டாவது மாடிக்கு தண்ணீர் வந்ததால் மொட்டை மாடியில் மூன்று நாளா கரன்ட் இல்ல உணவு, தண்ணீர் இல்லாம கஷ்டப்பட்டோம். காலையில் ஹெலிகாப்டர் வரவும். உதவி கேட்டு அட்டையில் எழுதி காட்டினோம்‌. கயிறு கட்டி மீட்டு மதுரைக்கு கொண்டு வந்தாங்க. ஹெலிகாப்டரில் ஏற்றும் போது உயிரே போன மாதிரி இருந்துச்சி என்றார்.

அதோடு ஊரில வீடு மூழ்கிடுச்சி மாடு கன்று என்ன ஆனதுனு தெரியல. எதுவுமே இல்லாம வந்திருக்கோம். என்றார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu