திருமணமான நான்கே மாதத்தில் கணவர் கொடுமை.. புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ் : இளம்பெண் தீக்குளிக்க முயற்சி!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2023, 4:37 pm

கணவரின் கொடுமை தாங்காமல் இளம்பெண் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சௌந்தர்யா. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே மதுவுக்கு அடிமையான மனோகர் திருமணம் ஆனது முதல் இரண்டு மாதங்களாக சௌந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட சௌந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து இரண்டு மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சௌந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மஞ்சுளாவை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். திருமணமான நான்கு மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!