அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதற்கு நான் சாட்சி : இபிஎஸ்சை சந்தித்த பின் ஆர்.பி. உதயகுமார் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 4:49 pm

ஜெயலலிதாவிற்கு எவ்வாறு விசுவாசமாக இருந்தோமோ அதே போன்று எடப்பாடி பழனிசாமிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றுவோம் என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானிய தொண்டன் எனக்கு இந்து வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைககு உரியவனாகவும் தலைமைக்கும், கழகத்துக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எவ்வாறு விசுவாசமாக பணியாற்றினோமோ அதேபோன்று பணியாற்றுவோம்.

சாமானிய தொண்ணடனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதை நிரூபித்து காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக சாட்சியாக இன்று நானும் இருக்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை நோக்கத்தோடு எனக்கு தெய்வ உள்ளதிடு இந்த வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.

திமுகவின் நிர்வாக குளறுபடிகளை தோல் உரித்து காட்டுகிற பணியினை கடந்த ஓராண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார் .இனிவரும் காலங்களிலும் அவர் காட்டுகிற வழியில் பயணிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியை வார்த்தையால் சொல்லாமல் வாழ்வில் வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார்.

அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் இன்று அதில் நானும் ஒருவனாக ஒரு சாட்சியாக இருக்கிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர நியமனம் தொடர்பாக சட்டப்படி முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை நடக்கட்டும் என அவர் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ