எம்ஜிஆர், ரஜினியை அடுத்தது இவருதான்… சூப்பர் ஸ்டார் பட்டத்தை தொட முடியாது, ஜெயிலரை வெல்ல முடியாது.. அஜித் ரசிகர்கள் போஸ்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 9:23 pm

நாளை உலகம் எங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை திரையுலகத்தில் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் படங்கள் அதிக வசூல் ஈட்டுவதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் எனவும் தொடர்ந்து கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களிலும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார் என அவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்கள் கோவையில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதில் சூப்பர் ஸ்டார் உயரத்தை தொடவும் முடியாது ஜெயிலர் சாதனையை வெல்லவும் முடியாது அர்த்தம் மைந்தா ராஜா என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டரில் அஜித் மட்டும் ரஜினி புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கோவை ரயில் நிலையில் பகுதியில் ஒட்டபட்டுள்ள போஸ்டரை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், போஸ்டரை பார்த்து, “அன்னைக்கு எம்ஜிஆர், முன்ந்தா நேத்து ரஜினி, இன்னைக்கு தல… தலைய விட்டா யாரும் இல்ல… தல கிட்ட அன்பு இருக்கு, பாசம் இருக்கு… தலைவர் கிட்டயாவ நிக்குற சூப்பர்…
தல ரசிகராக இருந்தாலும் தலைவர் தான் எனக்கு” என சொல்லி விட்டு போஸ்டரில் உள்ள ரஜினி மற்றும் அஜித் படத்திற்கு முத்தமிட்டு அன்பை பகிர்ந்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 389

    0

    0