ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தொழில்துறை வேகமாக வளர்கிறது.. நல்லாட்சியால் குவியும் முதலீடு : முதலமைச்சர் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2024, 12:47 pm

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தொழில்துறை வேகமாக வளர்கிறது.. நல்லாட்சியால் குவியும் முதலீடு : முதலமைச்சர் பேச்சு!

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது ” மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் வரவேற்கிறேன்.சென்னையில் காலையில் மழை பெய்தது. அதேபோன்று முதலீடு மழையாகப் பெய்யும் என நம்புகிறேன். பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவது வழக்கம்.

ஆனால் அனைத்து வெளிநாடுகளும் இங்கு வந்துள்ளதால் கோட் சூட் அணிந்துள்ளேன் என தெரிவித்தார்.

திருவள்ளுவர், கணியன் பூங்குன்றனார் பிறந்த மண்ணிற்கு முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. ஆட்சி மீது நல்லெண்ணம், சட்ட ஒழுங்கு சீராக இருப்பதால் மட்டுமே முதலீடு குவிக்கிறது.

2021 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தொழில்துறை வேகமாக பயணித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார கொள்கையில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. கல்வி வேலைவாய்ப்பில் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது.

2.5 ஐந்து ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 200 புரிந்துணர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். நாட்டிலேயே அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான்.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் அதி விரைவு பாதையில் தமிழ்நாடு பயணித்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என நம்புகிறேன்.

மாநிலத்தின் முதலீடு ஈர்ப்பு திறனை உலகுக்கு வெளிப்படுத்த முதலீட்டாளர் மாநாடு நடக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, தலைமைத்துவம், நீடித்த வளர்ச்சியை உள்ளிட்டவை குறித்து மாநாடு நடக்கிறது.

தொழில்மயமாக்கல், அத்தியாயத்தில் மகத்தான வளர்ச்சிக்காக முதலீட்டாளர்கள் மாநாடு அமைய உள்ளது” என தெரிவித்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!