மீண்டும்.. மீண்டுமா? ஓட்டுநர் மர்ம மரணம்? காவல்நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்.. மக்களுடன் இணைந்து அதிமுக குரல்!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2024, 7:47 pm
மீண்டும்.. மீண்டுமா? ஓட்டுநர் மர்ம மரணம்? காவல்நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம்.. மக்களுடன் இணைந்து அதிமுக குரல்!!
தென்காசி மாவட்டம் சங்கரன் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டுநராக உள்ளார். இவர் நேற்று இரவு அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள மக்களை மகா சிவராத்திரியை முன்னிட்டு வேனில் ஏற்றிக் கொண்டு சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளார்.
அப்போது சங்கரன் கோவில் நகரப் பகுதியில் வேன் விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்தில் வந்த போலீசார், மக்களை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு, முருகனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளார்.
செய்வதறியாமல் நின்ற மக்கள், சிறிது நேரம் கழித்து காவல்நிலையத்திற்கு சென்று ஓட்டுநர் முருகன் எங்கே என கேட்டுள்ளனர்,, அப்போது முருகன் இறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் கிடைத்த முருகனின் உறவினர்கள் சங்கரன் கோவில் டவுன் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். பின்னர் அங்கிருந்து உடலை பிரதே பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் முருகன் இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர், சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
A van driver was allegedly beaten to death by Sankarankovil police on Friday night. The victim has three children. Their relatives staged protest in front of police station. A case has been registered under CrPC 176. pic.twitter.com/ridg5ch0eG
— Thinakaran Rajamani (@thinak_) March 9, 2024
பின்னர் ஓட்டுநர் முருகனின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பின்னர் போராட்டக்காரர்கள் கலைந்தனர்.
சாத்தான்குளம் லாக்கப் மரணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல,
— AIADMK Tenkasi (@ADMKTenkasi) March 9, 2024
சங்கரன்கோவில் லாக்கப் மரணத்தில் உயிரிழந்த ஏழைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை அதிமுக மக்களுடன் இணைந்து போராடும்…
– தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா திரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா… pic.twitter.com/ptw0FhY1sc
இதையடுத்து இன்று அதிகாலை முதல் முருகனின் உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. உயிரிழந்த ஏழைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும்வரை அதிமுக மக்களுடன் இணைந்து போராடும் என தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா திருதிரு.C.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA கூறியுளள்ர்.
இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் Ex.MLA., அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் திருமதி.V.M.ராஜலட்சுமி அவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.