மீண்டும் பாஜக தலைவராக அண்ணாமலை.. மக்கள் வரவேற்பு : களைகட்டும் போஸ்டர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2025, 10:28 am

பாஜக தேசிய தலைமை சார்பில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, அந்தந்த மாநிலத்தின் தலைவராக ஒருவரை நியமனம் செய்து பாஜக தலைமை குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாஜக தேசிய தலைவர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

Annamalai Select Again as a BJP Leader

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கும் பணி ஆனது தேசிய தலைமையால் ஆலோசனை செய்யப்பட்டு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இதையும் படியுங்க: தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!

இந்த நிலையில் மதுரை பாஜக நிர்வாகிகள் சிலர் (அண்ணாமலையின் ஆதரவாளர்கள்) பிரேக்கிங் நியூஸ் “பாஜக தொண்டர்கள் உற்சாகம் பொதுமக்கள் வரவேற்பு”. என்றும் மீண்டும் தமிழக பாஜக தலைவராக கே அண்ணாமலைEX.IPS நியமிக்கப்பட்டுள்ளார்.

BJP Posters viral in Madurai

வழி முழுவதும் தொண்டர்கள் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு என்று மதுரை மாநகர் முழுவதும் பாஜக நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்டர் பாஜக நிர்வாகிகள் மத்தியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply