மீண்டும் தேர்தல் விதிமுறைகள் அமல்.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விழுப்புரத்தில் தீவிர கண்காணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 5:58 pm

விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விக்கிரவாண்டி சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இன்று(10-06-24) இந்திய தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை மாதம் 10ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டதால் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே இருந்த கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டு மறைக்கப்பட்டன. இதே போன்று கட்சி கொடி கம்பங்களில் இருந்த கட்சி கொடிகளும் அகற்றப்பட்டன.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 408

    0

    0