தள்ளாடும் வயதிலும் தளராத விடா முயற்சி : 77 வயதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மூதாட்டி…
Author: kavin kumar2 February 2022, 3:54 pm
தருமபுரி : நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தருமபுரி நகராட்சியில் 77 வயது மூதாட்டி சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான 192 இடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 4 வது நாளாக இன்று தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் 77 வயது மூதாட்டி சுயேட்சை வேட்பாளர் உட்பட 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை தருமபுரி நகராட்சியில் 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதே போல் மாவட்டத்தில் 10 பேரூராட்சிகளில் இன்று 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 66 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.