மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது.. அடிக்கடி இயங்கவில்லை என முகவர்கள் புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 8:18 pm

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது.. அடிக்கடி இயங்கவில்லை என முகவர்கள் புகார்!

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை முழுவதிலும் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டுவருகிறது

இங்கு நாள்தோறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை அவர்களது முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென இன்று மாலை முதல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள்வேலை செய்யாததால் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திடீரென சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்ட நிலையில் மழை பெய்த நிலையில் சிசிடிவி கேமராக்களுக்கு செல்லக்கூடிய வயர்களில் சிறிது பழுதை ஏற்பட்ட நிலையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்

மேலும் படிக்க: சவுக்கு சங்கருக்கு எதிராக குவியும் வழக்கு.. திருச்சி பெண் டிஎஸ்பி பரபரப்பு புகார்..!!!

இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு பின் சிசிடிவி கேமராக்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது இதனிடையே சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருப்பதை அறிந்த பல்வேறு கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் வேலை செய்வதை உறுதி செய்த பின்பாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் இனி இது போன்று சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருக்கக் கூடாது எனவும் முழுமையாக கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்து விட்டு சென்றனர்

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!