சுதந்திர தின விழாவை கொண்டாடிய AI ரோபோ – பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது..!

Author: Vignesh
15 August 2024, 4:22 pm

நாட்டின் 78வது சுதந்திர தின விழா வெகு விமர்சியாக கொண்டாப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையிலே, கோவை கருமத்தப்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர். பொறியில் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நவீன காலத்துக்கு ஏற்றவாறு வித்தியாசமான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடியிருப்பது பார்போரை வெகுவாக ஈர்த்தன.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோ மற்றும் ட்ரோன் மூலம் சுதந்திர தின விழா வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டன.இதில் 3டி ஏ.ஐ. ரோபோ கைகளில் தேசிய கொடி ஏந்தி வாழ்த்து தெரிவித்தது.


மேலும் மாணவர்கள் வடிவமைத்த ட்ரோனில் நாட்டின் தேசிய கொடி வானில் பறக்கவிட்டு சுதந்திர தின விழா கொண்டாடிய நிகழ்வு பார்ப்போரை வெகுவாக ஈர்த்தது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!