‘சொத்து வரி உயர்வுக்கு முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு’: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

Author: Rajesh
6 April 2022, 2:03 pm

சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.முதல் நாளான இன்று நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சொத்து வரி கடுமையாக மக்களை பாதிக்கிறது. மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வேண்டும் என அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

அதோடு அமைச்சர் மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. அதனால் தான் நாங்கள் உயர்த்திருக்கிறோம் என்கிறார். மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று சொல்லவில்லை. நகர்ப்புற தேர்தல் முடிவடைந்த பிறகு சொத்து வரியை உயர்த்தியிருக்கிறார்கள். மக்களுக்கு பரிசு வழங்கியுள்ளது.

மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சியில் உள்ள மக்கள் இந்த சொத்து வரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். வாடகை வீட்டில் வசிக்க கூடிய மக்களும் அதிகம் பாதிக்கபட்டிருக்கிறது.இதனால் வாடகை கட்டணம் உயரும் என்றும் கூறினார். மேலும் சொத்து வரியை உயர்த்தியதை கண்டிப்பதாக தெரிவித்தார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1277

    0

    0