வேட்பு மனு தாக்கல் செய்யாத அதிமுக, திமுக வேட்பாளர்கள் : பெரியகுளத்தில் 3 சுயேட்சைகள் போட்டியின்றி தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2022, 11:58 am

தேனி : பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி 3 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சியின் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதில் மொத்தமுள்ள 15 வார்டுகளுக்கும் 45 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் 1, 10, மற்றும் 11 ஆகிய மூன்று வார்டுகளிலும் பிரதான கட்சிகளான திமுக அதிமுக உள்ளிட்ட எந்த கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் 1வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்த முத்துச்செல்வி, 10 வது வார்டில் போட்டியிட்ட ஜெயராமன், 11 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட விமலா, ஆகிய மூவரும் எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி இரண்டு பெண்கள் ஒரு ஆண் உட்பட மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திலையில் சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்ட மூன்று வார்டுகளிலும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்த நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேட்சையாக 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது இரு கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 1160

    0

    0